Saturday, March 13, 2010

சித்திரச் சோலைகளே!













சி
த்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே!

தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்த அக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
ஊர்த் தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?

தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? - பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச் சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ? - பாவேந்தர் பாரதிதாசன் (1891 - 1964)

No comments:

Post a Comment